செவ்வாய், 1 டிசம்பர், 2015

கருட தரிசன மகிமை


ஞாயிறு ---நோய் தீரும்

திங்கள் ---துன்பங்கள் அகலும்

செவ்வாய் --அழகு சேரும்

புதன் ---விரோதிகள் விலகுவார்கள்
.
வியாழன் ---பில்லி, சூன்யம்நீங்கும்

வெள்ளி ---பூரன ஆயுள் கிடைக்கும்
 
சனி ---ஆயுள் விருத்தியாகும்

தானம் தரும் பலன்

நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே:


1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.

2.
வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.

3.
பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.

4.
கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

5.
தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

6.
நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.

7.
தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

8.
வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

9.
தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.

10.
நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

11.
அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.

12.
பால் தானம் - துக்கம் நீங்கும்.

13.
தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.

14.
தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

15.
பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.





சனி, 28 நவம்பர், 2015

ஆயிரம் கண்ணுடையாளின் ஆதி சமயபுரம்!



மகமாயி சமயபுத்தாயே - உன்
    மகளெனக்கு எல்லாமும் நியே
    கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்
    தரும் குங்குமத்தான் மங்கையர்க்கு காவல் (மகமாயி)

பெண்  கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
    அருள் தருவாள் இமயமலைச் செல்வி
    மூவிலை வேல் கைகொண்ட காளி
    பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி (மகமாயி)

பெண்  வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு - அது
    வினைதீர்க்க நீ அமைந்த கூடு
    திருநீறே அம்மா உன் மருந்து - அதை
    அணிந்தாலே நோய் ஓடும் பறந்து

பெண்  பெற்றவளே நீ அறிவாய் என்னை உன்
    பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
    கற்றகலை சிறு துளியே எனக்கு - அதை
    கடலாக்கி வைத்த புகழ் உனக்கு (மகமாயி)


 
மாரியம்மன் ஆலயங்களில், அவை அனைத்துக்குமான தலைமை பீடம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் ஆலயம். ‘சாய்ஞ்சா சமயபுரம்... சாதிச்சா கண்ணபுரம்’ என்பதற்கிணங்க வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் அளித்து சாதித்தவள் அவள். சாதித்து வருகிறவள். சாதிக்கப் போகிறவள். முக்காலங்களிலும் முதன்மை பெற்றவள்; வெகு சூட்சுமமானவள் முத்துமாரி!
 
கிருஷ்ணாவதார காலத்தில் கம்சன், தன்னைக் கொல்ல வந்த குழந்தை இதுவென எண்ணி, ஒரு பெண் குழந்தையை விண்ணிலே வீசியெறிந்து, அதனை வெட்ட வாளினை உயர்த்துகிறான். அக்குழந்தை வானத்தில் மிதந்தபடி, “ஏ... கம்சனே! உன்னைக் கொல்லப் போகிறவன் கோகுலத்தில் வளர்கிறான். நான் மாயாதேவி!” எனச் சொல்லியபடி வானில் பறந்து வந்து, பூமியில் ஒரு வேம்பு வனத்தினில் வந்தமர்கிறாள். அதுவே, ஆயிரம் கண்ணுடையாளின் ஆதி சமயபுரம் ஆயிற்று என்பதாக புராணம்.



கிழக்கு பிரதான வாசல். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால், மேல் நோக்கி ராஜகோபுரத்தைத் தேடுகிறோம். பிறை நிலவுபோல ஒரு பகுதி துருத்திக்கொண்டு வெளியே தெரிகிறது. காரணம், மண்டபங்கள். அதுமட்டுமல்ல; சற்றே உயரம் குறைவான ராஜகோபுரம்.

அதைக் கடந்து உள்ளே சென்றால், எதிரே மின்னுகிறது தங்கத் தகடுகள் வேய்ந்த துவஜஸ்தம்பம். பலி பீடம். முதல் பிரகாரத்தின் உள்ளே இடதுபுறம் திரும்புகிறோம். விநாயகர் சன்னிதி!

பெரும்பாலான ஆலயங்களில் கன்னி மூலையில்தான் விநாயகர் சன்னிதி அமைந்திருக்கும். இங்கு கன்னி மூலைக்கும் அக்னி மூலைக்கும் மத்தியில் மகா கணபதி சன்னிதி! இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளையும் உள்ளடக்கிய மூன்று விநாயகர்கள் காட்சியளிக்கின்றனர். முச்சக்தி விநாயகர்களின் திருவருள் பெற்று, பிரகாரத்தில் நடக்கிறோம். ஸ்தல விருட்சமான சுயம்பு வேப்ப மரம் வளர்ந்தோங்கி நிற்கிறது. அதன் கிளைகள் எங்கிலும் வேண்டுதல் எழுதப்பட்ட திருவுளச்சீட்டுகள் நிறைந்துள்ளன. இது புனித மரமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


முதல் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நவராத்திரி மண்டபம். மேற்கு வாயில். மேற்கு கோபுரம். வட மேற்கில் வசந்த மண்டபம். ஈசான மூலையில் யாக சாலை மண்டபம். தங்க ரதக் கூடம். முதல் பிரகாரத்தின் வடபுறத்தில் அபிஷேக அம்மன் சன்னிதி. இந்த அம்மனின் திருமேனி மீது பட்டு வெளியேறும் திருமஞ்சன தீர்த்தம்தான், பக்தர்களுக்கான அருமருந்து. அம்மை நோய் கண்டவர்கள், சரும நோய் கொண்டவர்களுக்கான தெய்விக சர்வ ரோக நிவாரணியே, இந்த திரு மஞ்சன தீர்த்தம்தான்.

அபிஷேக அம்மனை வலம் வந்து பொன்னிறக் கொடிமரம், பலிபீடம் கடந்து நகர்ந்து சென்றால் எதிரே கருவறை! அங்கே காணும் விழிகள் கசிந்து, வேண்டும் மனங்கள் உருகி, வருந்தி வந்து வணங்கி நிற்கும் தம் மக்களை மெய்சிலிர்க்க வைத்து அரவணைத்துக் கொள்கிறாள் சமயபுரத்தாள்!
 

விக்கிரம சிம்மாசனத்தில் விற்றிருக்கிறாள், சுயம்புவும் கருவறை மூலவருமான மாரியம்மன். பூவுலகில் வேறெந்த மாரியம்மனுக்கும் விக்கிரம சிம்மாசனம் கிடையாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. “இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், அது நிச்சயம் நிறைவேறும்.” என்கிறார்கள் பக்தர்கள். அந்த மகாமாரியம்மனைத்தான் இப்போது தரிசிக்கிறோம்.



 

  
மாதுளம் பூ நிற மேனி! சிரசில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. தங்கக் கிரீடம் தாங்கிக் குங்குமச் சிவப்பு நிறத்திருமுகத்துடன் திகழ்வதே ஒரு தனியழகு. அம்பாளின் திருமுகத்தில் திலகமாக முப்பத்தியாறு வைரக்கற்கள்.
 

  
அது என்ன கணக்கு? விக்கிரமாதித்தனுக்கு இந்திரன் பரிசளித்த சிம்மாசனத்தின் இரு புறங்களிலும் பதினெட்டு பதினெட்டு என மொத்தம் முப்பத்தியாறு படிகள். அவைகளை நிலைநிறுத்தும் விதமாக அம்மனின் திருமுகத்தில் திலகமென முப்பத்தியாறு வைரக்கற்கள்.
எட்டு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். கத்தி, சூலம், தாமரை, உடுக்கை ஆகியன வலது திருக்கரங்களில். பாசம், வில், மணி, கபாலம் ஆகியன இடது திருக்கரங்களில். ஏழு அசுரர்களின் தலைகளைக் கொய்து, அவைகளையே மாலையாக அணிந்துள்ளாள். இடது காலை மடக்கி (மடித்து) வைத்து, வலது காலை தொங்கவிட்டபடி வீற்றிருக்கிறாள்.

மாயா அசுரன் தலைமீது வலது கால் பதித்துள்ளாள். அதன் வலப்பக்கம் அசுரன் சண்டன் தலை, இடப்பக்கம் அசுரன் முண்டனின் தலையென, அம்பாளின் வலது காலின் அடியில் மூன்று அசுரர்களின் தலைகள்.


இத்தனை உக்கிரங்களைத் தாங்கியிருந்தபோதிலும், திருமுகத்தில் கருணை பொங்க, மந்தகாசப் புன்னகையுடன் காட்சி அருள்கிறாள், ஸ்ரீமாரியம்மன்.

கருவறைக்கு அருகில் உற்சவ அம்மன் சன்னிதி. மாரியம்மன் இங்கு ஆயிரங்கண்ணுடையாள் திருமேனியாக விக்கிரக வடிவில், தெற்கு நோக்கி சன்னிதி கொண்டுள்ளாள். முன்னோடியான கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி தனிச் சன்னிதி கொண்டுள்ளார்.



மத்தியில் சூர்ப்பநாயக்கர் சன்னிதி. அதன் கிழக்கே செல்லாண்டியம்மன் சன்னிதி. கிராம தேவதை அவள். அடுத்து, நின்ற திருக்கோலத்தில் பொன்னுக்கு அருளும் விநாயகர்.

“ஆதியில் கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம் என்றாகி தற்போது சமயபுரம். அதனால் ஊர் மாறி. காளிதான் இவள். பேர் மாறி, மாரி ஆனவள். மாரி என்றாலே கருமை நிறம் கொண்டவள். இவள் நிறமோ மாதுளம் பூ செந்நிறம். அதனால் உருமாறி (மேனி நிறம் மாறி). ஆயிரம் கண்ணுடையாள் உற்சவ மாரியம்மன் விக்கிரகம். பாலாபிஷேகத்தின்போது, அவளது திருமேனி மீது எண்ண முடியாத அளவுக்கு, அம்மை முத்துக்கள் தெரியும்.

எல்லா வயதினரின் அம்மை மற்றும் சரும நோயினை நீக்கிக் காத்தருள்பவளாக இங்கு வீற்றிருக்கிறாள் ஆயிரம் கண்ணுடையாள். அவளே சமயபுரத்தாள்!”



ஆடி வெள்ளித் திருவிழா!
ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். அதுவும் ஆடி கடைசி வெள்ளியன்று, லட்சக்கணக்கில் பெண்களும் ஆண்களும் திரள்கின்றனர். பொதுவாக எல்லா மாதங்களிலுமே செவ்வாய், வெள்ளி தினங்களில் சுமார் 50,000 பக்தர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சம்; அமாவாசை நாட்களில் இரண்டு லட்சம்; சித்திரை தேர்த் திருவிழாவின்போது ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் வந்து செல்கின்றனர்.


பச்சைப் பட்டினி விரதமும் பூச்சொரிதலும்!
மாசி மாதம் பூச்சொரிதல் விழா. மாசி கடைசி ஞாயிறு தொடங்கி, பங்குனி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் பூச்சொரிதல். முதல் பூ ஸ்ரீரங்கம் பெருமாளிடம் இருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே, மற்ற ஊர்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து வரும் பூக்கள் அம்மன் மீது சொரியப்படும். அந்த இருபத்தியெட்டு நாட்களிலும் சமயபுரம் மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் அனுஷ்டிக்கிறாள். அம்மனுக்கு இளநீர், பானகம், பழங்கள், பச்சரிசி துள்ளு மாவு மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது தினசரி ஆறு கால பூஜைகளிலும்.



ரெங்கநாதன் தங்கச்சி... அவளுக்கு எத்தனை தங்கச்சி?

தைப்பூசத் திருநாளின்போது, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே எழுந்தருள்கிறாள் சமயபுரம் மாரியம்மன். ஸ்ரீரங்கம் பெருமாளும் அங்கு எழுந்தருள்கிறார். தன் தங்கை மாரியம்மனுக்கு, சீர் வரிசைப் பொருட்கள் தந்து அனுப்புகிறார் அண்ணன் நம்பெருமாள். அன்பில் மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், வலங்கைமான் மாரியம்மன், நார்த்தாமலை மாரியம்மன், பவானி பெரியபாளையம் மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் என சமயபுரம் மாரியம்மனுக்கு மொத்தம் ஆறு தங்கைகள்.



திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது சமயபுரம்.
 
 

திருச்சானூரில் திகழும் திரு!

செல்வ வளம் தரும் தாயார்! 

பெருமாள் கோவிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை வணங்கி, அதன் பிறகே பெருமாளை வணங்குவது மரபு. திருப்பதி செல்பவர்கள், நேராக வெங்கடாசலபதியைத் தரிசித்த பிறகே திருச்சானூர் செல்கின்றனர்; ஆனால், முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும்.

முற்பிறப்பில் வேதவதி என்னும் பெயரில் பிறந்தாள் பத்மாவதி தாயார். அழகில் சிறந்த அவள், ஒரு தபஸ்வினியாகி காட்டில் தவமிருந்தாள். ஒரு முறை, அவளை பார்த்தான் ராவணன். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினான். ராமபிரானைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று அவனிடம் தெரிவித்த வேதவதியை பலவந்தப்படுத்தினான் ராவணன்.


அவனிடம், “பெண்ணிச்சையால் என்னைப் பலவந்தப்படுத்திய உனக்கு இதே இச்சையால் அழிவு நேரும்…’ என சாபமிட்டாள் வேதவதி. பின்னர் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அக்னியில் விழுந்த அவளை, எரிக்காமல் பாதுகாத்தார் அக்னிபகவான்.
ஒருமுறை, அவள் ராமபிரானைச் சந்தித்தாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். “இப்பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்…’ என்று வாக்களித்தார் ராமபிரான்.


இதன்படி, திருமலைக்கு சீனிவாசன் வர, பத்மாவதியைச் சந்தித்தார். தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.


சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவித்தாள். அதுகேட்டு ஆனந்தமடைந்தார் மன்னர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் நடக்கவிருந்த திருமணத்தைக் காண தேவலோகமே கூடியது.


சீனிவாசன் ஏழை என்பதால், ராஜா வீட்டுப்பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலையில், திருமணச்செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.
“குபேரா! என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்…’ என்று எழுதிக்கொடுத்தார்.


சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது. நாராயணன், இன்னொரு திருமணம் முடித்துவிட்டார் என்ற தகவலை லட்சுமியிடம் சென்று சிண்டுமுடித்தார் நாரதர். கோபமடைந்த லட்சுமி, சீனிவாசனிடம் வந்து நியாயம் கேட்டு அழுதாள். அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.


“லட்சுமி! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாயசீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லட்சுமி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.
பின்னர், லட்சுமியிடம், “நீ என் மார்பில் அமர்ந்துகொள்.


என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன். பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் எனப்படுகிறது. பிற்காலத்தில் திருச்சானூர் என்ற பெயர் சூட்டப்பட்டது.


 
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, குறத்தி ஒருத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்கின்றனர் ஆந்திரத்து பெரியவர்கள்.

திருப்பதி திருமலையை, ஆகாசராஜன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். இவனுக்கு, லட்சுமி தாயாரே, பத்மாவதியாக அவதாரம் எடுத்து, மகளாக பிறந்திருந்தாள். இவளைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன், திருமால், ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பரம ஏழையாக அவதாரம் செய்தார். ராஜா வீட்டுப் பெண்ணை, ஏழைக்கு, எப்படி திருமணம் செய்து வைப்பர்! எனவே, குறத்தி வேடமிட்டு, ஸ்ரீநிவாசன், பத்மாவதியின் அரண்மனைக்குள் நுழைந்தார்.

இங்கிருந்து தான், திருமணத்தடை உள்ளவர்கள், கதையை கவனமாக படிக்க வேண்டும்.



அந்தக் குறத்தி மிகவும் அழகாக இருந்தாள். அவளைப் பார்த்து, திருமலையில் வசிக்கும் மக்கள் மட்டுமல்ல, விண்ணில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும் அசந்து போய் விட்டனர். ஆகாசராஜனும், அவன் மனைவியும், குறத்தியைப் பார்த்தனர். அவளது பேரழகும், முகத்தில் இருந்த பிரகாசமும், அவர்களை அறியாமலேயே, அவளை, அரண்மனைக்குள் அழைக்க வைத்தது.
 

தங்களுடன் அழைத்துச் சென்று, தங்கள் மகள் பத்மாவதி முன் உட்கார வைத்தனர்.

‘குறத்தியே… உனக்கு எந்த ஊர்?’ என்று கேட்டாள் பத்மாவதி.



‘நான் முத்துமலையில் வசித்திருக்கிறேன்; குடகுமலையில் வாழ்ந்திருக்கிறேன்…’ என்று, சொல்லிக்கொண்டே போனவள், ‘இன்று, இந்த திருமலைக்கு வந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா மலைகளும், என் மலை தான்…’ என்றாள்.
‘ஓகோ… அப்படியானால், நீ குறி சொல்வாயா?’

‘என்ன… அப்படிகேட்டு விட்டீர்கள்… சிவனும், பார்வதியும் வசிக்கும் கைலாய மலைக்கு சென்று, அவர்களுக்கும் குறி சொல்லியிருக்கிறேன்; இந்திரலோகம் சென்று, தேவேந்திரனுக்கு
ம், இந்திராணிக்கும் குறி சொல்லியிருக்கிறேன்…’ என்று, பிரதாபித்தாள் குறத்தி.



‘உங்கள் நாட்டில் எல்லா
ரும் நலமா?’ என்று, கேட்டாள் பத்மாவதி.
‘இளவரசி… எங்கள் நாட்டில் எல்லாரும் நண்பர்களே… பகை என்ற சொல்லே அங்குள்ளவர்களுக்கு தெரியாது. புலியும், பசுவும் ஒரே ஓடையில் தண்ணீர் குடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் ஊரில், வாழை, கிழக்கு நோக்கி குலை தள்ளும்; பலாப்பழமோ மேற்கு நோக்கி காய்க்கும்…’ என்றாள்.
இவ்வாறு நடப்பது, ஒரு நாட்டிலும், வீட்டிலும், மங்கல நிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறிகள்.

பின், பத்மாவதியின் கையைப் பார்த்த குறத்தி, ‘எந்தக் கை, இப்போது, உன் கையைப் பிடித்திருக் கிறதோ, அந்தக் கைக்கு நீ சொந்தமாவாய்…’ என்றாள்.
பத்மாவதி, ஏதும் புரியாமல், குறத்தியைப் பார்க்க, ‘இளவரசி… உன் மனதுக்குப் பிடித்தவனே, உனக்கு கணவன் ஆவான்…’ என்றாள்.
பத்மாவதிக்கு, நிம்மதிப் பெருமூச்சு.

ஆம்… அவளுக்கு, உலகையே காக்கும் அந்தக் கோவிந்தனே தன் மணாளன் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை நிறைவேறி, பத்மாவதி தாயார் திருச்சானுாரில் குடியிருந்து, நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாள். கார்த்திகை மாதத்தில், அவளுக்கு பிரம்மோற்சவம் நடக்கும்.

அவள், ‘அலர்மேல் மங்கை’ எனப்படுகிறாள். சொல் வழக்கில், அலமேலு என்பர். அலர் என்றால் தாமரை. ‘செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்’ என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது.

பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்ன இந்தக்கதையைப் படிப்பவர்கள், அன்னையின் தேரோட்டத்தை தரிசித்து வாருங்கள். விரைவில், திருமணம் நடக்க, அந்த அலர்மேல் மங்கை அருள் செய்வாள்.
 

கங்காஷ்டகம்!

 

1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!


பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!
க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!


ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்
ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி
ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்
பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் !!


யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது. குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது. காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை, புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்
பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!
பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்
கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் !!


முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I
பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I
சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ
காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீ!!


காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!
த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்
ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!


ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது. சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்
விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !
ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!


ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !
ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!


கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம். அப்பொழுது ஹரியும், ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!


புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.


கங்காஷ்டகம் முற்றிற்று.
 

 

அன்னபூர்ணா ஸ்துதி!

1.நித்யானந்தகரீ வராபயகரீ லௌந்தர்யரத்னாகரீ
நிற்தூதாகில கோரபாபநிகரீ ப்ரயக்ஷமாகேச்வரி !
ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ II 


நித்யானந்தம் செய்பவள், வரம், அபயம் இவற்றை கையில் கொண்டவள், அழகின் கடலானவள், கோரபாபங்களை நீக்குபவள், நேரில் காணும் மஹேச்வரஸ்வரூபமானவள், ஹிமய மலையின் வம்சத்தை வளர்த்து பரிசுத்தமாக்கியவள், காசீபுரியில் வீற்றிருந்து ஆட்சி புரிபவள், கருணையைப் பொழிபவள் ஆகியதாய் அன்னபூர்ணா தேவியே எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

2.நாநாரத்ன விச்த்ரபூஷணகரீ ஹேமாம்பராடம்பரீ
முக்தாஹார விடம்பமான விலஸத்வக்ஷே£ஜ கும்பாந்தரீ !
காச்மீராகருவானி தாங்கருசிரா காசீபுராதீச்வரி
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


பலவித ரத்னங்களிழைத்த ஆபரணங்களையணிந்தவள், தங்கமயமான அங்கியை யணிந்தவள், பளபளக்கும் முத்து மாலைத்துவளும் மார்பகத்தையுடையவள், காச்மீர -அகில் சந்தனம் மணக்கும் தேகம் கொண்டவள் காசீபுரத்தின் ஆட்சித் தலைவி, கருணைப் பிடி தருபவள் ஆகிய அன்னபூர்ணேச்சவரி, எனக்கு பி¬க்ஷ கொடுக்கட்டுமே.

3.யோகானந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மைகருஷ்டாகரீ
சந்த்ரார்கானல பாஸமானயஹரீ த்ரைலோக்யரக்ஷ£கரீ
ஸர்வைச்வர்யகரீ தப:பல கரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


யோகத்தினால் ஆனந்தம் விளைவிப்பவள், தர்மம் ஒன்றிலேயே கவனம் அமையச் செய்பவள், சந்திரன், சூர்யன் அக்னி இவர்கள் போல் பிரகாசிப்பவள், மூவுலகையும் காப்பவள், எல்லோருக்கும் ஐச்வர்யம் நல்குபவள், தவத்திற்கு பயனளிப்பவள் - அவளே காசீபுரியில் ஆட்சிபுரியும் அன்ன பூர்ணையே!எனக்கு க்ருபை செய்து பி¬க்ஷயளிப்பாயே!

4.கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீஹ்யுமா சாங்கரீ
கௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஹ்யோங்கார பீஜாக்ஷரீ!
மோக்ஷத்வார கவாட பாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


கைலாஸமலைக் குகையை கோயிலாகக் கொண்டவள், கௌரீ, உமை, சங்கரீ, குமாரி, வேதப்பொருளாகப் புலனாகிறவள், ஒங்கார பீஜாக்ஷரங்களைக் கொண்டவள், மோக்ஷ வாசலைத் திறப்பவள், காசீபுரியில் ஆட்சி செய்பவள், ஆகிய என் தாயே!க்ருபை செய்பவளே!எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

5.த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ருஹ் மாண்டபாண்டோதரீ
லீலாநாடகஸ¨த்ர கேலனகரீ விஜ்ஞானதீ பாங்குரீ
ஸ்ரீவிச்வேச மன:ப்ரஸாதநகரீ காசீபுராதீச்வரி
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


கண்ணுக்கு எட்டியதும் எட்டாததுமான ஐச்வர்யத்தை விளைவிப்பவள், அண்டசராசங்களை வயிற்றில் கொண்டவள். பற்பல லீலைகளை நடிக்கும் அவள் விஜ்ஞான தீபச்சுடரானவள். மேலும் ஸ்ரீவிச்வநாதரின் மனதிற்கினியவள். காசீபுரத்து ஆட்சியாளரான அந்த அன்னபூர்ணேச்வரித்தாய் கிருபை என்ற ஊன்றுகோலைத் தந்து பி¬க்ஷ கொடுக்கட்டுமே!


6.ஆதிக்ஷ£நிதஸமஸ்த வர்ணநிகரீ சம்புப்ரியா சாங்கரீ
காச்மீர த்ரிபுரேச்வரீ த்ரிநயனீ விச்வேச்வரீ சர்வரீ
ஸ்வர்க த்வார கவாட பாடநகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


அ தொடங்கி க்ஷ வரையிலான எழுத்துக்கள் வடிவானவள். சம்புவின் ப்ரியை, மங்களம் தருபவள், காச்மீரத்து த்ரிபுரேச்வரீ, மூன்று கண்ணுடையவள்;உலகமாதா; ஒய்வெடுக்கச்செய்பவள்;ஸ்வர்க வாசல் திறப்பவள், காசியையாளும், கருணை சுரக்கும் அன்னை அன்னபூர்ணை எனக்கு பி¬க்ஷ கொடுக்கலாமே.


7.உரிவீ ஸர்வஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
நாரீநீலஸமான குந்தலதரீ நித்யான்னதானேச்வரீ
ஸாக்ஷ£ன் மோக்ஷகரீ ஸதாசுபகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ !!


பூமி உருவாக இருந்து எல்லா மக்களையும் காப்பவள். வெற்றி தருபவள். கருணைக் கடலாகிய அன்னையும் அவள். கருமையான குந்தலம் தரித்தவள். நித்யம் அன்னமளிப்பதில் வல்லவள். மோக்ஷம் அருளுபவள். எப்போதும் நன்மை பயப்பவள். காசீயையாள்பவள். கருணையுருவானவளே, அன்னையே, அன்னபூர்னேச்வரீ, எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

8.தேவீ ஸர்வ விசித்ர ரத்னருசிரா தாக்ஷ£யணீ ஸுந்தரி
வாமா ஸ்வாதுபயோதரா ப்ரியகரீ ஸெளபாக்யமாஹேச்வரீமி
பக்தாபீஷ்டகரீ ஸதாசுபயகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ !!


எல்லா (பற்பல) ரத்னங்களால் அழகிய தேவீ அவள், சற்றுக் கடுமையாக இருப்பினும் இனிய பால் சுரக்கும் அன்புக்குகந்தவள். ஸெளபாக்கியங்களை தன்வசப்படுத்தியவள் மட்டுமில்லை. பக்தர்களுக்கு (வேண்டியதை வாரி வழங்கும் காசீபுரத்து அரசி) க்ருபையை ஊன்றுகோலாக அமைத்துக் கொடுக்கும் அன்னை அன்னபூர்ணாம்பிகை எனக்கு பி¬க்ஷ கொடுக்கட்டும்.

9.சந்த்ரார் கானல கோடி ஸத்ரூசீ சந்த்ராம்சு பிம்பாதரீ
சந்த்ரார்காக்னி ஸமான குண்டலதரீ சந்த்ரார்க வர்ணேச்வரீ
மாலாபுஸ்தகபாச ஸாங்குசதரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ !!


சந்திரன், சூர்யன், அக்னி இவர்கள் கோடிக்கணக்கில் இருந்தால் அவர்கள் நிகராகலாம் என்றபடி இருப்பவளும், சந்திர கிரகணமும், கோவைப்பழமும் ஒன்று சேர்ந்தார் போன்ற உதட்டையுடையவளும், சந்திரன், சூர்யன், அக்னி இவரையத்த குண்டலம் அணிந்தவளும், சந்திரசூர்ய நிறம் வாய்ந்தவளும், மாலை, புஸ்தகம், பாசம், அங்குசம் இவற்றை கையில் கொண்டவளும், காசீபுரத்தின் அரசியுமான எனதன்னை அன்னபூர்னேச்வரீ தயவுடன் பி¬க்ஷயளிக்கட்டும்.

10.க்ஷத்ரத்ராரகரீ மஹாபயகரீ மாதா க்ருபாஸாகரீ
ஸர்வானந்தகரீ சிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீமி
தக்ஷ£க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ !!


க்ஷத்ரியருக்கு பாதுகாப்பு அளித்தவள், பெரும் பயத்தைப் போக்குபவள், கருணைக் கடலானவள், அனைவருக்கும் ஆனந்தமளிப்பவள், மங்களமளிப்பவள், விக்னேச்வரீ, செல்வியும் அவளே. மேலும் தக்ஷனை கதற வைத்தவள், நோய் தீர்ப்பவள். காசீ ராஜ்யத்தின் அரசியும் ஆவாள். அந்த அன்னை அன்னபூர்ணை பி¬க்ஷ தந்தருளட்டும்.

11.அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே I
ஜ்ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ£ம் தேஹிச பார்வதீ II 


ஹே அன்னபூர்ணே, எப்பொழுதும் நிறைவானவளே, ஸ்ரீ சங்கரின் ப்ரியே. ஹே பார்வதீ, எனக்கு ஜ்யானம், வைராக்யம் உண்டாகும் வண்ணம் பி¬க்ஷ யருள்வாயாக.

12.மாதா ச பார்வதீதேவீ பிதா தேவோ மஹேச்வர: I
பாந்தவா:சிவபக்தா:ச ஸ்வதேசோ புவனத்ரயம் II 


எனக்கு தாய் பார்வதீ, தந்தை மஹேச்வரன், சிவ பக்தர்களே உறவினர், மூன்று உலகுமே எனது ஊராகும்.


அன்னபூரணா ஸ்துதி முற்றிற்று.      





 

சௌபாக்ய சுந்தரி விரதம்



பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ்வதே சௌபாக்கியம் எனப்படும்.

அத்தகைய நிறை வாழ்வு வரம் தரும் இவ்விரதத்தில் அன்னையை சௌபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபட வேண்டும்.

தக்ஷனின் மகளான சதி தேவி இவ்விரதத்தின் பயனால் சிவனாரை மணந்தாள்.

இவ்விரதம் சௌபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.

இது அகண்ட வரதானம் பெற்றுத் தரும் விரதங்களுள் ஒன்று.

ஒரு சமயம் சில யோகினி தேவதைகள் பார்வதி தேவியின் தோழியரான ஜெயா, விஜயாவிடம்  "தேவியை மகிழ்வித்து வரம் பல பெற சுலபமான விரதம் எது? எனக் கேட்க, அவர்கள் "சௌபாக்ய சுந்தரி" விரதத்தை விரிவாகக் கூறினார்கள். எவ்விரதத்தை அனுசரிப்பதால் குடும்பம் செழித்து விளங்கும்.

விரத நாள்:

இவ்விரதம் சித்திரை மாதம் வளர்பிறை திருதியை (அக்ஷய திருதியை) அன்றும், கார்த்திகை மாதம் தேய்பிறை திருதியை (கார்த்திகை பௌர்ணமிக்குப் பிறகு வரும் திருதியை) அன்றும் அனுசரிக்கப்படுகிறது.

விரத முறை:

விரத தினத்தில் அதிகாலை நீராடி  முறையாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி  சிவப்பு வஸ்திரத் தால் அலங்கரிக்க வேண்டும்.

மங்கல பொருட்கள் என சொல்லப்படும் பதினாறு வகை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருமணி, மர சீப்பு, கண் மை,  மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்துகொள்ள வேண்டும்.

பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜையை காலை அல்லது மாலை செய்யலாம்.

முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவக்ரகங்களை வணங்க வேண்டும்.

பின்னர் சிவ பார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன் ,  தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

பின்னர் யாரேனும் இருவருக்கு  உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.