திங்கள், 26 அக்டோபர், 2015

காணாமல் போனவற்றை மீட்டுத்தரும் அரைக்காசு அம்மன்!






பொதுவாக புதுக்கோட்டை அருகேயுள்ள திருக்கோகர்ணம் பிரகதாம் பாளையே அரைக்காசு அம்மனாக வணங்கி வருகிறோம். களவு போனவை, காணாமல் போனவற்றை மீட்டுத்தரும் சக்தி வாய்ந்த தெய்வம் அரைக்காசு அம்மன்.



ஞாபக மறதியாக வைத்துவிட்ட பொருளைத் தேடும்போதும், காணாமல் போன பொருட்கள் கிடைக்கவும் இந்த அம்மனை எண்ணி வேண்டிக்கொண்டால் அவை கிடைக்கும். பொருள் கிடைத்ததும் வீட்டிலேயே வெல்லத்தில் பிள்ளையார்போல பிடித்துவைத்து, அதை அம்மனாக எண்ணி வழிபடவேண்டும்.






பின்னர் அந்த வெல்லத்தை அனைவரும் பிரசாதமாக உட்கொள்ளலாம். களவுபோன பொருட்கள் கிடைக்கவும், கொடுத்த கடன் திரும்ப வராமலிருந்தாலும், தங்கள் சொத்து கைக்கு வந்துசேர்வதில் தடையிருந்தாலும் இந்த அம்மனிடம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அம்மனுக்கு வெல்லத்தில் பொங்கல் வைத்து நிவேதனம் செய்து வழிபடலாம்.





சனி, 24 அக்டோபர், 2015

நலம் தரும் நவராத்திரி!


நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது  (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.


வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை  விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை  அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள்,  சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.  இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.



தேவியரின் வாகனம்:

இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி - மயில்
வராகி - எருமை
அபிராமி - அன்னம்
நரசிம்மி - சிங்கம்
சாமுண்டி - பூதம்


அம்பாளை வணங்குவதன் பலன்:

அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.


ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.  கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச்  சொல்லவும்.

பெண்கள் பண்டிகையா?

நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.


பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா
மகேஸ்வரி- சிவன்
கவுமாரி- குமரன் (முருகன்)
வைஷ்ணவி- விஷ்ணு
வராஹி- ஹரி (வராக அவதாரம்)
நரசிம்மி- நரசிம்மர்
இந்திராணி- இந்திரன்.

இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.


அம்மையைத் தடுக்க அஷ்டமி படிப்பு:

நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி
(நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.

மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?
 
 நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள்  லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.

புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.  நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில்  சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.




 

மாதங்கள் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள்



தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள்  குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதனைச் செய்தால் வாழ்வில்  சுபயோகம் வந்து சேரும்.


சித்திரை    -     நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்

வைகாசி    -     பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்


ஆனி    -     தேன்


ஆடி    -     வெண்ணெய்


ஆவணி    -     தயிர்


புரட்டாசி    -     சர்க்கரை


ஐப்பசி    -     உணவு, ஆடை


கார்த்திகை    -     பால், விளக்கு


மார்கழி    -     பொங்கல்


தை    -     தயிர்


மாசி    -     நெய்


பங்குனி    -     தேங்காய்



இதே போல, 7 கிழமைகளுக்கும்  கூட  தானம் இருக்கிறது.

ஞாயிறு    -     பொங்கல், பாயாசம்

திங்கள்    -     பால்

செவ்வாய்    -     வாழைப்பழம்

புதன்    -     வெண்ணெய்

வியாழன்    -     சர்க்கரை

வெள்ளி    -     கல்கண்டு

சனி    -     நெய்





 

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள்!

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள்! (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)

படிப்பில் வல்லவனாக:-

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:

வயிற்று வலி நீங்க:-
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:

உற்சாகம் ஏற்பட:-
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:

ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:-
மஹா புத்திர் மகாவீர்யோ மகாசக்திர் மஹாத்யுதி:

கண்பார்வை தெளிவுபெற :-
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

பெருமதிப்பு ஏற்பட :-
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோநர:

எண்ணிய காரியம் நிறைவேற :-
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப: ஸித்தித: ஸித்தி ஸாதன:

கல்யாணம் நடக்க :-
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு:

உயர்ந்த பதவி ஏற்பட :-
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந: ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:

மரண பயம் நீங்க :- வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:

அழியாச் செல்வம் ஏற்பட :-
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதந:

நல்ல புத்தி ஏற்பட :-
ஸர்வதர்சீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்

சுகம் உண்டாக :-
ஆநந்தோ நந்தநோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம:

க்ஷேமம் உண்டாக :-
அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:

துன்பங்கள் தொலைய :-
பூசயோ பூஷணோ பூதிர் விசோக: சோகநாசன:

வியாதிகள் நீங்க :-
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய:

மோக்ஷமடைய :-
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண:

சத்ருவை ஜெயிக்க :-
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த: சத்ருஜிச் சத்ருதாபன:

ஆபத்து விலக :-
அமூர்த்திரநகோ சிந்த்யோ பயக்ருத் பயநாசந:

மங்களம் பெருக :-
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:

துர்சொப்பனம் நீங்க :-
உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸ்வப்நநாசந:

பாபங்கள் நீங்க :-
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசந:

 
 
 

கண் பார்வை குறைபாடு நீங்க!

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான கண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய்,  இதை சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

கண் பார்வை குறைபாடு நீங்க!


 முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.


கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
 
முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.


இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.


வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில்
எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்  குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.


மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.
 
ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
 
நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
 
பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
 
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
உச்சி வெயிலில் அலையக் கூடாது.

முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:

முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்


 இரண்டையும் நன்றாக  மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத் தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.


பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது.
 
கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

கண் பார்வை குறைபாடு சரி செய்ய வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று
.
 
நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.
 
அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப் பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கி விடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி
சரியாகும்

 எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம்  தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.
 
 

சங்கர நாராயணர் கோயில்!

இங்கு ஒரு நாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும் இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும் மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.

ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.

திங்களன்று சந்திரனை  நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.

புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.

வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம். 

வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.

 சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.

ஒரு வருடம் பழமும் ஒரு வருடம் சருகும் ஒரு வருடம் தண்ணீரும் ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். இது எதுவுமே இங்கு தேவையில்லை.

ஒரே வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்துவிடும்.

1


அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்…………ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்…………………. நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்………… பிறரை ஏமாற்றியிருந்தால்……………ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்………….இந்த வரராசைக்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.

இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார். அதனால் இதை விட உயர்ந்த தலம் வேறில்லை.

சிவகணங்களில் நந்ததீஸ்வரர் நவரத்தினங்களில் வைரமும் ராசிகளில் சிம்மமும் தேவர்கலில் இந்திரனும் மிருகங்களில் கஸ்தூரி பூனையும் இலைகளில் வில்வமும் பாணங்களில் பாசுபதாஸ்திரமும் சக்திகளில் உமாதேவியும் பூக்களில் தாமரையும் குருக்களில் வியாழபகவானும் முனிவர்களில் அகத்தியரும் பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ………………. அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.

இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு.

இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்.

ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும்.

இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.

pambu_2044408h

இங்கே தன் ஒரு மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகாதான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும். இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக் கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர். 

இத்தலம் எதுவென இன்னும் புரியவில்லையா?  சங்கரனாகிய சிவனும் நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில்

கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்.

.ஊர் பெயர் சங்கரன் கோவில்.

வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று வந்து விடுங்கள்.



 

சகல நன்மைகளும் தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு!

download-1

வெண்மையான வாசனை மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சித்து வழிபட சரஸ்வதி கடாட்சம் நிச்சயம் கிட்டும்.. சகலகலாவல்லி மாலை சொல்லி இந்த வழிபாட்டைச் செய்யலாம். நெய்ப்பாயசம் வடை வெண்பொங்கல் ஆகியவற்றில் ஏதேனும் நைவேத்தியம் செய்வது சிறப்பு.

mmm

48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டைச் செய்தபிறகு வெள்ளிக்கிழமைதோறும் தொடர்ந்து வழிபட உங்கள் நாவில் சரஸ்வதி தேவி தாண்டவமாடுவாள்.

conqueror-water-lily

துளசி மற்றும் தாமரையால் ஸ்ரீ சக்ரத்தை வழிபட லட்சுமி கடாட்சம் பெருகும். சர்க்கரைப் பொங்கல் கற்கண்டு சாதம் மற்றும் தேன் நைவேத்தியம் செய்வது நல்லது.

download-72-720x480

சிவப்பு மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் தொழில் விருத்தி உத்தியோகத்தில் உயர்வு அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப்பெறுவர்.

download

மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்தால்  நோய்கள் அகலும். எதிர்ப்புக்கள் நீதி மன்ற வழக்குகள் சாதமாகும். ஸ்ரீ சக்ரத்தில் ஸ்ரீபாலா என்னும் குழந்தை வடிவாக தேவியை தியானித்து பாலன்னம் தயிர் சாதம் படைத்து வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

super-moon-2

வளர்பிறை பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால் துன்பங்கள் தீரும். மகிழ்ச்சி பெருகும்.