சனி, 24 அக்டோபர், 2015

குருதோஷம் போக்கும் மந்திரம்!



அஸ்வமேத யாகம் நடத்திய மகாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெற, மகாவிஷ்ணு குள்ள வடிவில் வாமனராக எழுந்தருளினார்.

வந்திருப்பவர் விஷ்ணு என்பதை உணர்ந்த மகாபலி, அவரது திருவடியில் சரணடைந்தான். அவனுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த வாமனர், சிரஞ்சீவியாக வாழும் பாக்கியத்தை வழங்கினார்.

வேதாந்த தேசிகனால் இயற்றப்பட்ட தசாவதார ஸ்தோத்திரம், குருவுக்குரிய அதிபதியாக வாமன மூர்த்தியைக் குறிப்பிடுகிறது.

இவரை மனதில் தியானித்து, ‘ஓம் ஸ்ரீவாமன மூர்த்தியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை தினமும் ஜெபித்து வந்தால், குருதோஷத்தால் ஏற்படும் சிரமம் அனைத்தும் தீரும் என்பர்.




 

அமர்நாத் குகையில் பனி லிங்கம் புராண வரலாறு!


அமர்நாத் குகையில் பனி லிங்கம் உருவாவதைக் குறித்துப் புராண வரலாறு கூறும் தகவல்:

சிவபெருமான் தவம் இயற்றவும், தனிமையை விரும்பியும், பார்வதிக்கு வேதத்தின் உட்கருத்தை விளக்கவும். பார்வதியுடன் இமயத்தில் ஒரு குகை நோக்கிப் புறப்பட்டார். அப்படிப்போகும் வழியில் உள்ள மாமலேச்சுரம், பகல்காம் சந்தன் வாரி, சேஷ்நாக், பஞ்சதரணி போன்ற ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் முறையே விநாயகர், நந்திபகவான், சந்திரன், நாகராஜன், கங்காதேவி ஆகியோரை நிறுத்தி யாரும் தம்மைப் பின் தொடராது. கவனிக்க ஆணையிட்டு, யாரும் கவனிக்காதவாறு உமையவளுடன் அமர்நாத் குகைக்குள் சென்றடைந்தார். பரமன் குகையின் வாயிலுக்குள் நுழைந்ததைக் கண்ட, கிளி ஒன்று தன் சேய்க்கிளியை விட்டு விட்டுப் பறந்து சென்று விட்டது. குகைக்குள் நுழைந்த பரமன், அங்கு அம்பாள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேத ரகசியத்தைக் கண்மூடி சொல்லத் தொடங்கினார் பரமன், சொல்லச் சொல்ல பார்வதி தேவி உம்... உம்  என்ற சப்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பார்வதி தூங்கி விட பரமசிவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, உம்  என்ற சப்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது!

பார்வதி தூங்கிய பின்னும், பார்வதி போல் குரல் கொடுத்தது அங்கிருந்த கிளிக் குஞ்சு, இதனை அறியாத சிவ பெருமான் ரகசியம் முழுவதும் சொல்லி முடித்த பின், கண் திறந்து பார்க்க பார்வதி, தூங்குவதும், உம்  என்ற சப்தம் வருவதையும் கண்டார். சிவன் கண் திறந்தவுடன், பயந்து போன கிளி பறந்து வெளியே சென்று விட்டது. அந்தக் கிளியைப் பிடிக்க பரமசிவன் தொடரும் வேளையில் சிவ கணங்கள் இருவர் அங்கு மறைந்திருப்பதைக் கண்டார். இந்த ரகசியத்தை அவர்கள் மற்றவர்களுக்கு உரைத்து விடாமல் இருக்க, அந்த இரு சிவகணங்களையும் புறாக்களாக மாற்றினார். இன்றும் அந்த இரு புறாக்கள் மட்டும் குகையில் இருப்பதைக் காணலாம். அதற்குப் பின் சிவபெருமான், கிளியைத் தேடிப் புறப்பட்டார்.

குகையில் இருந்து பறந்து சென்ற கிளிக் குஞ்சு, பரமசிவன் தன்னைத் தொடர்ந்து வருவதால் எப்படியும் பிடித்துக் கொன்று விடுவார் என்ற பயத்தில் பரமன் சொன்ன வேதத்தினைக் கேட்ட சக்தியால் ஒளியாக (சிறுஜோதி) மாறி, தான் பறந்து வந்த வழியில் இருந்து வசிஷ்ட முனிவரின் குடிலை அடைந்து, அங்கிருந்த சாளரம் வழியாக உள்ளே புகுந்து, அருந்ததியின் கருவில் புகுந்து அடைக்கலமானது. வசிஷ்டரின் குடிலின் வாயிலை யாரோ தட்டும் சத்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்தார். வசிஷ்டர் வாசலில் வேடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். ரிஷியே, இங்கே கிளிக் குஞ்சு ஒன்று வந்ததா? அதை நீங்கள் பார்த்தீர்களா? என்றார் வேடன் வேடத்தில் வந்த சிவ பெருமான் வேடனாய் நிற்பது சிவன் என்பதை அறியாமல் வசிஷ்டர், இல்லை  என்று பதிலுரைத்தார். சிவவேடனும் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு, வசிஷ்டரின் மனைவி வயிற்று வலியால் துன்பப்பட்டாள் வயிறும், கர்ப்பிணிப் பெண் போல் பெரிதாக இருந்தது. வசிஷ்டர் தன் மனைவி அருந்ததி வயிறு பெரிதாகி துன்பப்படுகிறாள். என்று பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட அவர்கள் இது பரமனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்டு பரமசிவனிடம் முறையிடுமாறு ஆலோசனை கூறினார்கள். வசிஷ்டர், தன் மனைவி அருந்ததியுடன் பரமசிவனைச் சந்தித்தார். பரமன், அருந்ததியின் வலிக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டு, அருந்ததியின் வயிற்றுக்கருகே சென்று , கிளியே, வெளியே வா  என்று அழைத்தார். வெளியே வர மறுத்த கிளி, அருந்ததியின் வயிற்றுக்குள் அமைதியாக இருந்தது.. மீண்டும், பரமசிவன், கிளியே நீ வெளியே வந்தால் பெரிதும் போற்றப்படுவாய்  என்று அருளினார்.

சிவபெருமானின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட கிளி, கிளி முகத்துடனும், மனித உடலமைப்புடனும் குழந்தையாகப் பிறந்தது. அந்தக் குழந்தைதான் சுகப் பிரும்மம்  என நாம் போற்றி வணங்கும் தெய்வம் ஆவார். சுகபிரம்மர் வியாசரின் மைந்தன் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும் பரம் பொருளின் திருவிளையாடலால் அருந்ததியின் கருவிற்குள் ஒளியாய்ப் புகுந்து கிளியாய் வெளிவந்த சுகபிரம்மரை வசிஷ்டரின் வழி வந்தவராகக் கருதி, பிரம்ம ரிஷி எனப் போற்றுவார்கள். நாளடைவில் அந்தக் கிளிக் குழந்தை வளர்ந்து சிறுவன் ஆனான், பிறப்பிலேயே தாமறிந்த வேத ரகசியத்தை நண்பர்களுக்கும் போதிக்க முயன்றான். ஆனால், ஈசன் அவர் முன் தோன்றி அவரை தடுத்து ஆட்கொண்டார்.

இன்று முதல் உனக்கு சுகப்பிரும்மம் என்று பெயர். உன்னை, நீ பிறந்த திருவோணம் நட்சத்திரத்தன்று வழிபட்டால், அவர்களுக்கு நினைத்தது நடக்கும். சுகமான வாழ்வு கிட்டும் என்று அருளினார். மகிழ்ச்சியடைந்த சுகப்பிரம்மர். பரம்பொருளே, தாங்கள் தேவ ரகசியத்தை உபதேசித்த அந்தக் குகையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள வேண்டும். என்று வேண்டினார். சரி என்று சம்மதித்த சிவபெருமான், சிராவண மாதத்தில் அந்தக் குகையில் மட்டும் வெண்மையாகக் காட்சி அளிக்கிறேன். என்னைக் கண்டு தரிசிக்கும் பக்தர்களுக்கு மறு பிறப்பு இல்லை. அதிலும் சுகப்பிரம்மராய் நீ அவதரித்த சிரவண மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று தரிசித்தவர்கள் பேறுகள் பல பெற்று வளமுடன் வாழ்வர் என்று வரம் தந்தார். இதன்படியே சிரவண மாதத்தில் வரும் இரு பவுர்ணமிகளுக்கு இடையில் ஒரு மாதம் பனிலிங்கமாகக் காட்சி தருகிறார், சிவபெருமான்.

இக்காலத்தில் முன் கூட்டியே திட்டமிட்டு அமர்நாத் பயணித்து பனி லிங்கத்தைத் தரிசித்தால் பெரும் பாக்கியம் கிடைக்கும். அதிலும், அமர்நாத் குகையில் திருவோண நட்சத்திரமும் பவுர்ணமியும் ஒன்றாக வரும். நாளில் பனி லிங்கத்தைத் தரிசிப்பதால், வாழ்வில் அஷ்ட ஐஸ்வர்யங்களும், மறுமையில் சிவ முக்தியும், பெற்றுச் சிறக்கலாம். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 141 கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரத்தில் அமர்நாத் பனிக்குகை உள்ளது. இங்கு தான் ஒவ்வொரு வருடமும் பனி லிங்கம் உருவாகி பிறகு சிறிது சிறிதாகக் கரைந்து விடுகிறது.

இந்நாளில் தங்கள் ஊரில் உள்ள சிவன்கோயிலுக்குச் சென்று சிவலிங்கத்தைத் தரிசித்து வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும் என்பர்.

திருவோண நட்சத்திரத்தில் திருமால் தரிசனம் கோடி புண்ணியம் தரும் என்று கூறுவர். அதேபோல், ஆவணி திருவோணத்தில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்து சிவபெருமானின் அருளைப் பெறலாம். அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தைத் தரிசிக்க இயலாதவர்கள் தங்கள் ஊரில் உள்ள சிவன்கோயில்களுக்குச் சென்று சிவலிங்கத்தைத் தரிசித்தும் பலன் பெறலாம் என்பர்.






 

நதி தேவதைகளை அழைக்கும் ஸ்லோகம்!


ஆறு, குளம், கிணறு, பாத்ரூம் என எங்கு குளித்தாலும் சரி தான்; அங்கே நதி தேவதைகளை அழைக்கும் வகையில் ஒரு எளிய ஸ்லோகம் சொல்ல வேண்டும்.

கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு!

பொருள்: கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி நதி தேவதைகளே! நான் நீராடும் இந்த ஜலத்தில் எழுந்தருளுங்கள்! இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் குளிப்பவர்களுக்கு, பாலைவனத்துக்கே சென்றாலும் தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்கும் என்பர்,



 

தெய்வங்களுக்கான நட்சத்திரங்கள்!

 
 
ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. உங்கள் நட்சத்திரம் தெரியும்.

உங்களது நட்சத்திரத்தை கொண்ட தெய்வம் எது தெரியுமா?

அஸ்வினி - சரஸ்வதி

பரணி - துர்க்கை


கார்த்திகை - முருகன், அக்னி


ரோகிணி - பிரம்மா, கிருஷ்ணர்


மிருகசீரிஷம் - சந்திரன்


திருவாதிரை - பரமசிவன்


புனர்பூசம் - அதிதி, ராமர்


பூசம் - பிரஹஸ்பதி, குருதட்சிணாமூர்த்தி


சித்திரை - விஸ்வகர்மா


சுவாதி - வாயு


விசாகம் - முருகன்


அனுஷம் - லட்சுமி


கேட்டை - இந்திரன்


மூலம் - அசுரர், அனுமன்


பூராடம் - வருணன்


உத்திராடம் - கணபதி


ஆயில்யம் - ஆதிசேஷன்


மகம் - சுக்ரன்


பூரம் - பார்வதி


உத்திரம் - சூரியன், ஐயப்பன்


அஸ்தம் - ஐயப்பன், பிள்ளையார்


திருவோணம் - விஷ்ணு


அவிட்டம் - வசுக்கள்


சதயம் - எமன்


பூரட்டாதி - குபேரன்


உத்திரட்டாதி - காமதேனு,


ரேவதி - சனி






 
 

ஏகாதசி! எத்தனை ஏகாதசி!


வருடத்தில் 25 ஏகாதசி!


திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். இதில் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும் போது செல்வச்செழிப்பும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.

1. பாபமோசனி ஏகாதசி - சித்திரை மாதம் தேய்பிறை
2. காமதா ஏகாதசி - சித்திரை மாதம் வளர்பிறை
3. வருதினி ஏகாதசி - வைகாசி தேய்பிறை
4. மோகினி ஏகாதசி - வைகாசி வளர்பிறை
5. அபரா ஏகாதசி - ஆனி தேய்பிறை
6. நிர்ஜலா ஏகாதசி -  ஆனி வளர்பிறை
7. யோகினி ஏகாதசி - ஆடி தேய்பிறை
8. தேவசயினி /பத்ம  ஏகாதசி - ஆடி வளர்பிறை
9. காமிகா ஏகாதசி - ஆவணி தேய்பிறை
10. புத்ரதா  ஏகாதசி - ஆவணி வளர்பிறை
11. அஜாஅன்னதா ஏகாதசி - புரட்டாசி தேய்பிறை
12. பார்ஷ்வா - வாமன (பத்மநாபா) ஏகாதசி - புரட்டாசி வளர்பிறை
13. இந்திரா ஏகாதசி - ஐப்பசி தேய்பிறை
14. பவித்ரோபன / பாபங்குசா  ஏகாதசி - ஐப்பசி வளர்பிறை
15. ரமா ஏகாதசி     - கார்த்திகை தேய்பிறை
16. பிரபோதினி ஏகாதசி - கார்த்திகை வளர்பிறை
17. உற்பத்தி ஏகாதசி - மார்கழி தேய்பிறை
18. வைகுண்ட ஏகாதசி - மார்கழி வளர்பிறை
19. ஸபலா ஏகாதசி - தை தேய்பிறை
20. புத்ரதா ஏகாதசி- தை வளர்பிறை
21. ஷட்திலா ஏகாதசி - மாசி தேய்பிறை
22. ஜயா ஏகாதசி - மாசி வளர்பிறை
23. விஜயா ஏகாதசி - பங்குனி தேய்பிறை
24. ஆமலகீ ஏகாதசி - பங்குனி வளர்பிறை
25. கமலா ஏகாதசி -  இந்த ஏகாதசிக்குரிய தினத்தை பஞ்சாங்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். இந்த திதி வரும் மாதத்தை புருஷோத்தம மாதம் (பெருமாளுக்குரிய மாதம்) என்று சிறப்பிப்பர்.




நன்றி: தினமலர்
 

துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்.. கங்கையில் ஆயிரம் ஆண்டு நீராடிய பலன் !



துலா ஸ்நானம்:


காவிரியில் ஒரு நாள் குளித்தால்.. கங்கையில் ஆயிரம் ஆண்டு நீராடிய பலன் !


வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும். ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும். இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு. காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும்.

பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம். தமிழ்நாட்டில் பவானி, உ.பி.யில் அலகாபாத், கர்நாடகாவில் திருமுக்கூடல் ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.

ஒரு சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார். அப்போது இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது. அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார். வானா அரசன் வாலி சிறந்த சிவபக்தன். அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.

காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது.

ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி.

ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.



 

அசூன்ய சயன விரதம்



தம்பதிகள் பிரிவதை தடுக்கும் அசூன்ய சயன விரதம்


ஆவணி (சிராவண) மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர்- மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும்.

பிறகு,

"
லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ கதாசித்யதோ பவான் ததா
களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்

(
ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோஅப்படி நானும் எனது மனைவியுடன்- கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின் வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பத்ம புராணம்.